நேற்று இரவு ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர் வந்து அமரும் முன்பே
#ஆயில் இல்லாம ரெண்டு சப்பாத்தி கொடு!
என சர்வரிடம் ஆர்டர் செய்தார்.
சாப்பிட்டு முடித்து பில் கொடுக்கும் போது
"இங்க சிகரெட் இருக்குங்களா???" ன்னார்.
நான் சிரித்துகொண்டே அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி ஆயில் இல்லாம சப்பாத்தி சாப்பிட்ட நீங்க இப்ப சிகரெட் கேட்குறீங்களே.. சிகரெட் மட்டும் நல்லதுங்களா??
எந்தவகையில உங்க ஒடம்புமேலே அக்கறை செலுத்தறீங்கன்னு எனக்கு புரியல??? ன்னு கேட்டேன்.
சற்றே யோசித்தார்..
"அட ஆமாங்க..
கரெட்டுதான் நீங்க சொல்றது. ஆனா பழகிட்டேனே.. விடமுடியல.
ரெண்டு கிங்ஸ் கொடுங்க"ன்னு மீண்டும் ரூபாயை என்னிடம் நீட்டுகிறார்.
#புற்றுநோய் மிகவும் கொடியது. தயவுசெய்து புகைக்காதீர்கள்.
#HOTELCHINNAVEEDU
No comments:
Post a Comment